ஸ்ரீ சைதன்ய மகாபிரபு பற்றி வேதங்களின் கூற்றுகள்
1) ஸ்ரீமத் பாகவதம் (11.5.32)
கிருஷ்ண – வர்ணம் த்விஷா கிருஷ்ணம்ஸாங்கோபாங்காஸ்த்ர – பார்ஷ்தம்யக்ஞை: ஸங்கீர்த்தன-ப்ராயைர்யஜந்தி ஹி ஸூ-மேதஸ: கலியுகத்தில் சிறந்த புத்திமான்கள், சதா கிருஷ்ணருடைய நாமங்களைப் பாடிக் கொண்டிருக்கும் பகவானின் அவதாரத்தைக் (ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை) கீர்த்தனை என்ற யாகத்தாலேயே பூஜிக்கின்றனர். அவரது வர்ணம் கருமையில்லை என்றாலும் அவர் கிருஷ்ணரே ஆவார். அவர் தமது சகாக்களாலும், சேவகர்களாலும், ஆயுதங்களாலும், அந்தரங்கத் தோழர்களாலும் சூழப்பட்டிருக்கிறார்.
ஸ்வர்ண-வர்னோ – அவர் பொன்னிற மேனியுடையவர் ஹேமங்க – அவர் உருகியதங்கம் போன்றவர்வரங்க – அவர் உன்னத அழகுடையவர்சந்தன அங்காதி – பகவானின் உடல்முழுவதும் சந்தனம் பூசப்பட்டுள்ளனசந்யாச-க்ருச் – அவர் தன்னடக்கமுள்ளவர். எல்லோரையும் சமமாக பாவிப்பவர்சாந்த – அவர் முழு அமைதியுடையவர்.நிஷ்தா – அவர் பகவானின் புனிதநாமத்தை ஜபிப்பதில் உறுதியானவர்.சாந்தி-பராயண – அவர் பக்தி மற்றும் அமைதியின் மிக உயர்ந்த அடைக்கலம். அவர் மாயாவதி தத்துவ வாதங்களை வென்றார். அவர்களை வைஷ்ணவத்திற்கு மாற்றினார்
பக்தி-யோக ப்ரதாணாய லோகஸ்ய அநுக்ரஹாய சசந்யாச-ரூபம் ஆஸ்தாய க்ருஷ்ண-சைதன்ய நாம த்ருக் மக்களை பக்தி சேவையில் ஈடுபடுத்த, அவர்கள் மேல் கருணை பொழிய நான் சந்தியாசம் ஏற்று “கிருஷ்ண சைதன்யர்” என்ற பெயரை ஏற்பேன்.